Wednesday, May 26, 2010

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

திரைப்படம்: குமாரராஜா
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

Saturday, May 22, 2010

திரைப்படம்: நாடோடி

திரைப்படம்: நாடோடி
இயற்றியவர்: கவிஞர்
கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி.
சுசீலா

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர்
இருந்தார்
என் அருகே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என்
அருகே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம்
தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால்
என்னென்ன சுகமோ?
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாதி விழிகள் மூடிக்
கிடந்தேன்
பாவை மேனியிலே
நீ பார்த்தாயே வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என்
அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே
வென்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும்
நீங்க்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
சேர்ந்து
சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே நீ
சாட்சியடி
வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என்
அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே
வென்ணிலவே

ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல்
தொடுத்தான்
ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல்
தொடுத்தான்
சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
பாவை மேனியிலே நீ
பார்த்தாயே வென்ணிலவே
ஆஆஆஆஆஆ

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என்
அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே
வென்ணிலவே

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts