எங்கிருந்து வந்தாயோ
பாடியவர்: ஸ்ரேயா கோஷல்
எங்கிருந்து வந்தாயோ?
எதற்க்காக வந்தாயோ?
என்னமோ சொன்னையே…
கத பேசி போனாயே…
அதை நானும்
அறியும் முன்னே
நீயும் மறைந்தாயே
மெல்ல காற்றில்
கரைந்தாயே…..
எதற்க்காக வந்தாயோ?
என்னமோ சொன்னையே…
கத பேசி போனாயே…
அதை நானும்
அறியும் முன்னே
நீயும் மறைந்தாயே
மெல்ல காற்றில்
கரைந்தாயே…..
எங்கிருந்து….
வாச தண்ணி தெளிக்கையில,
வந்து நீயும் நனைக்கிறியே.
துணிமணிய தொவக்கையில,
என்ன நீயும் புளியிறியே.
ஆய்ஞ்சு வச்ச கீர போல,
நினைப்புல நீ கடையிறியே.
அம்மி நச்ச தேங்கா சில்லா,
அடி மனச நசுக்கிறியே!
அட நீயும் மறைந்தாயே…
காற்றில் கரைந்தாயே…
வந்து நீயும் நனைக்கிறியே.
துணிமணிய தொவக்கையில,
என்ன நீயும் புளியிறியே.
ஆய்ஞ்சு வச்ச கீர போல,
நினைப்புல நீ கடையிறியே.
அம்மி நச்ச தேங்கா சில்லா,
அடி மனச நசுக்கிறியே!
அட நீயும் மறைந்தாயே…
காற்றில் கரைந்தாயே…
எங்கிருந்து வந்தாயோ…
நடக்கையில தொடர்ந்து வர,
நடு நடுவே மறைஞ்சுடுவ!
தலை முடிய ஒதுக்கையிலும்,
வகடுகுள்ள ஒளிஞ்சிடுவ!
கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன,
கழுவி விட மனமில்லையே!
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன,
ஒதர ஒரு வழியில்லையே!
அட நீயும் மறைந்தாயே…
மெல்ல காற்றில் கரைந்தாயே…
உயிரோடு உறைந்தாயே…
நடு நடுவே மறைஞ்சுடுவ!
தலை முடிய ஒதுக்கையிலும்,
வகடுகுள்ள ஒளிஞ்சிடுவ!
கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன,
கழுவி விட மனமில்லையே!
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன,
ஒதர ஒரு வழியில்லையே!
அட நீயும் மறைந்தாயே…
மெல்ல காற்றில் கரைந்தாயே…
உயிரோடு உறைந்தாயே…
எங்கிருந்து……..