சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்...
எல்லோரும் தாங்க மாட்டார்...
செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது....
நீயென்ன சொல்றதும, அட நீயென்னய்யா சொல்றது
நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு
அட......நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு
சும்மா சத்தம் போடாதீங்கப்பா (பேச்சுச் சத்தம்)
சும்மா இருங்கப்பா....பேப்பர் பார்த்துத்தான்ப்பா சொல்றான் ---
நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு
அட......நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு
சும்மா சத்தம் போடாதீங்கப்பா (பேச்சுச் சத்தம்)
சும்மா இருங்கப்பா....பேப்பர் பார்த்துத்தான்ப்பா சொல்றான் ---
(கை தட்டி) ஹஹ்....ஹஹ்.....ஹஹ்க்கா (சிரிப்பு)
வீடெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும் ?
சுதந்திரம் என்ன செய்யும் ?
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும் ?
சுதந்திரம் என்ன செய்யும் ?
நசுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை
அடைக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை
ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை
வேறொன்றும் நாம் செய்யத் தேவையில்லை
கேட்போம் உரிமை கேட்போம் உரிமை...உரிமை...உரிமை.....
அடைக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை
ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை
வேறொன்றும் நாம் செய்யத் தேவையில்லை
கேட்போம் உரிமை கேட்போம் உரிமை...உரிமை...உரிமை.....
உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான்
கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன..
காரியம் செய்தால் என்ன...?
கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன..
காரியம் செய்தால் என்ன...?
விதியாகப் பட்டது வலியது அதை யாரும் வெல்ல முடியாது
பாண்டவாளைப் பார்க்கலையோ
ஜானகியை விட்டு ஸ்ரீராமனையே பிரிக்கலையோ
பெரியவா சொன்ன வேதங்கள் பொய்யில்லே...ஆகவே விதி வலியது
பாண்டவாளைப் பார்க்கலையோ
ஜானகியை விட்டு ஸ்ரீராமனையே பிரிக்கலையோ
பெரியவா சொன்ன வேதங்கள் பொய்யில்லே...ஆகவே விதி வலியது
விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை
உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே..மேலெ
முன்னேறு மேலே மேலே
உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே..மேலெ
முன்னேறு மேலே மேலே