விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்துள்ள “பிச்சைக்காரன்”
விஜய் ஆண்டனி 2006’ம் வருடம் இயக்குனர் சசி அவர்களின் “டிஷ்யூம்” படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் 2012’ம் ஆண்டில் ஜீவா ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் “நான்” என்னும் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். அதை தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களில் நடித்து மூன்று வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்துள்ளார்.
விஜய் ஆண்டனி ஜோடியாக சாண்டா டைடஸ் என்னும் புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தை “பூ” இயக்குனர் சசி இயக்கியுள்ளார். இப்படம் ஒரு பிச்சைக்காரனை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என இயக்குனர் தான் பேசும்போது தெரிவித்தார். இந்த படம் காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படமாக இருக்கும் என பேசினார்.
இந்த படத்தில் ஆறு பாடல்கள் மற்றும் ஒரு தீம் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இசை வெளியீட்டுக்கு முன்பாக படத்தின் சில பாடல்காளை திரையில் ஒளிபரப்பினர். அதில் பத்திரிக்கையாளர் ஏக்நாத்ராஜ் எழுதி விஜய் ஆண்டனி பாடியுள்ள “நூறு சாமிகள்” என்று தொடங்கும் பாடல் ஒளிப்பரப்பப்பட்டது. அப்பாடலை செவியில் கேட்டு மகிழ்ந்த அனைவரும் கைத்தட்டி பாராட்டினர்.
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான் தந்தாலுமே
உன் தியாகத்துக்கீடாகுமா
நான் பட்டக் கடன் தீர்ப்பேனென்றால்
ஓர் ஜென்மம் போதாதம்மா
நடமாடும் கோயில் நீதானே
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ஆராரோ…………. ஆராரிரோ………….
ஆராரோ…………. ஆராரிரோ………….
மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை
குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை
மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை
குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை
மெழுகாக உருகி தருவாளே ஒளியை
குழந்தைகள் சிரிப்பில் மறப்பாளே வலியை
நடமாடும் கோயில் நீதானே
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா
ரத்தத்தை நான் தந்தாலுமே
உன் தியாகத்துக்கீடாகுமா
நான் பட்டக் கடன் தீர்ப்பேனென்றால்
ஓர் ஜென்மம் போதாதம்மா
நடமாடும் கோயில் நீதானே