Monday, May 8, 2017

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

படம் : ஆட்டோகிராப்
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : சித்ரா
பாடலாசிரியர்:  பா.விஜய்



ஆட்டோகிராஃப் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்சேரன் இதனை எழுதி, இயக்கி, தயாரித்ததுடன் நடிக்கவும் நடித்தார். இப்படம் வணிக நோக்கில் பெருவெற்றி பெற்றதுடன் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றது.

நடிகர்கள்[தொகு]

  • சேரன் - செந்தில்குமார்
    • சிவப்பிரகாசம் - செந்தில்குமார், (சிறுவயது)
  • சினேகா - திவ்யா
  • கோபிகா - லத்திகா
  • மல்லிகா - கமலா
  • கனிகா - தேன்மொழி
  • இளவரசு - நாராயணன் (ஆசிரியர்)
    • கருப்பையா பாரதி - நாராயணன் ஆசிரியர் (வயதானவர்)
  • கிருஷ்ணா - கமலக்கண்ணன்
  • பெஞ்சமின் - ஊளமூக்கன் சுப்பிரமணி
    • பாண்டி - ஊளமூக்கன் சுப்பிரமணி (சிறுவயது)
  • ராஜேஷ் - செந்தில்குமாரின் அப்பா
  • விஜயா சிங் - செந்தில்குமாரின் அம்மா

வென்ற விருதுகள்[தொகு]

இத்திரைப்படம் வெளியான நாள்முதல் இப்படம் வென்ற விருதுகளை கீழே காணலாம்.

பாடல்கள்[தொகு]

ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பரத்வாஜ் ஆவார்.
எண்பாடல்பாடியவர்(கள்)
1"ஞாபகம் வருதே"பரத்வாஜ்
2"கிழக்கே பார்த்தேன்"யுகேந்திரன்போனி
3"மனமே நலமா"பரத்வாஜ்
4"மனசுக்குள்ளே தாகம்"ஹரிஷ் ராகவேந்திராரேஷ்மி
5"மீசை வச்ச பேராண்டி"கோவை கமலாகார்த்திக்
6"நினைவுகள் நெஞ்சினில்"உன்னிமேனன்
7"ஒவ்வொரு பூக்களுமே"சித்ரா
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்
!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!
மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு

Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts