Monday, May 8, 2017

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க

Movie nameஎங்க ஒரு ராஜா
Music: எம்.எஸ்.விஸ்வநாதன்
Singer(s)TM சௌந்தரராஜன்
Lyrics: கண்ணதாசன்


Image

கவியரசர் கண்ணதாசன் எங்க ஊர் ராஜா என்ற படத்துக்கு, ''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.'' என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். "யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க"
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர். பாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார்.
மெல்லிசை மன்னர், '' என்ன கவிஞரே, இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே, கொஞ்சம் மாற்றக் கூடாதா? யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கய்யா போங்க, என்று எழுதக் கூடாதா?'' என்று கேட்டார்.
அதற்கு கவிஞர் கிண்டலாக, ''டேய், நீ ரொம்ப அடக்கமானவன். இது எனக்கு மட்டுமல்ல. ஊருக்கே தெரியும். ' விஜயவாடா ' என்கிற ஊரைக் கூட'விஜயவாங்க' என்று சொல்கிற ஆள் நீ. பேசாம நான் சொல்கிற பல்லவியை அப்படியே போடு.'' என்றார்.


யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
குளத்தில தண்ணி இல்லே, கொக்குமில்ல மீனுமில்லே
குளத்தில தண்ணி இல்லே, கொக்குமில்ல மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே, பெத்த புள்ளே சொந்தமில்லே
பெட்டியிலே பணமில்லே, பெத்த புள்ளே சொந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
தென்னையப் பெத்தா எளநீரு, பிள்ளயப் பெத்தா கண்ணீரு
தென்னையப் பெத்தா எளநீரு, பிள்ளயப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா, பிள்ளை மனமோ கல்லம்மா
பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா
சோதனையாய்ப் பங்கு வெச்சா, சொந்தமில்லே, பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
நெஞ்சமிருக்கு துணிவாக, நேர்மையிருக்கு துணையாக
நெஞ்சமிருக்கு துணிவாக, நேர்மையிருக்கு துணையாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக, நான் யார்...நான் யார்... போடா போ
ஆடியில் காத்தடிச்சால், அ(ஐ)ப்பசியில் மழை வரும்
தேடிவரும் காலம் வந்தால், செல்வமெல்லாம் ஓடிவரும்...
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts