Showing posts with label கண் போன போக்கிலே கால் போகலாமா. Show all posts
Showing posts with label கண் போன போக்கிலே கால் போகலாமா. Show all posts

Sunday, May 7, 2017

கண் போன போக்கிலே கால் போகலாமா



கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
( கண் )
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
( கண் )
பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள்.. அது நாகரீகம்
( கண் )
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
( கண் )



Bookmark and Share

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts