Showing posts with label யாரோ யாருக்குள் இங்கு யாரோ. Show all posts
Showing posts with label யாரோ யாருக்குள் இங்கு யாரோ. Show all posts

Friday, March 31, 2017

யாரோ யாருக்குள் இங்கு யாரோ


படம்: சென்னை 600028
பாடல்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ!
இசை: யுவன்சங்கர் ராஜா
இயக்குநர்: வெங்கட் பிரபு

பல்லவி
======
ஆ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடையில்லா ஓர் கேள்வி
பெண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி (யாரோ யாருக்குள்)
ஆ: காதல் வரம் நான் வாங்க
கடைக்கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள்தோறும்
ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்குக் யார் தந்தாரோ
விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி

சரணம்-1



=======
பெ: ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இங்கு தோற்றுப் போனேன்
கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே
ஆ: ஓஹோஹோ
நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்
பெ: காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
ஆ: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே
ஆ: யாரோ
பெ: ஆஹா யாருக்குள் இங்கு யாரோ
ஆ: ம்ஹீம்.. யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
பெ: விடையில்லா ஒரு கேள்வி
ஆ: உயிர்க்காதல் ஒரு வேள்வி

சரணம்-2
=======

ஆ: உந்தன் ஆடை காயப்போடும்
உங்கள் வீட்டுக் கம்பிக்கொடியாய்
என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன்
பெ: ஆஹாஹாஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி
எட்டிப் போய்விடு இல்லை ஏதோ ஆகிடும்
ஆ: காதல் கொஞ்சம் பேசும்போது
சென்னைத் தமிழும் செந்தேன் தான்
பெ: ஆசை வெள்ளம் பாயும்போது
வங்கக்கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா ஹா..

ஆ: யாரோ
பெ: ம்ஹீம் ஹீம்
ஆ: யாருக்குள் இங்கு யாரோ
பெ: ஆஹா ஹா
ஆ: யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடையில்லா ஒரு கேள்வி
பெ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
ஆ: காதல் வரம் நான் வாங்க
கடைக்கண்கள் நீ வீச
கொக்கைப்போல நாள்தோறும்
ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி

Bookmark and Share

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts